பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த ‘சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம்- 2024’ கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (20-06-2024) பாமுனை அல்-ஹிக்கா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் வெற்றி பெற்ற அணிக்கும், திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பிரதம அதிதியால் வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
-ஊடகப்பிரிவு-