ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தான பக்டீரியா கோவிட் போன்று பரவக்கூடியதல்ல என சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
இந்த நோய் வைரஸ் ஒன்றினால் ஏற்படுவதல்ல எனவும், இது ஓர் பக்டீரியா தாக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளின் ஊடாக இந்த நோயை கட்டுப்படுத்திவிடலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நோய் தொடர்பில் விமான நிலையங்களில் கண்காணிப்புச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது இராஜாங்க அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார்.
ஜப்பானில் அடையாளம் காணப்பட்ட இந்த பக்டீரியா சதை உண்ணும் அபாயமான நோய் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.