முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் தற்போதுள்ள சுற்று நிருபங்களில் திருத்தம் செய்வதற்காக கல்வி அமைச்சர் அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
கல்வியில் சமமான அணுகலை உறுதி செய்வதற்கான வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகளை குறைப்பதற்காக கடந்த ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திருத்தத்தின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டிற்கும் அதன் பின்னரும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.