கொழும்பு
நாட்டில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண் சரிவு அபாய (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டம் – எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகள், களுத்துறை மாவட்டம் – தொடங்கொட, அகலவத்தை, மத்துகம மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள், கேகாலை மாவட்டம் – தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுகள், மாத்தறை மாவட்டம் – பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலக பிரிவுகளில் வசிப்போருக்கு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மரங்கள், மின் கம்பங்கள், தொலைபேசி இடுகைகள் நீரூற்றுக்களின் அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதுடன், பள்ளமான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் சுவர்களில் விரிசல், திடீர் நீருற்றுக்கள் தோன்றுதல் அல்லது ஏற்கனவே உள்ள நீருற்றுக்களில் நீர் காணாமல் போதல், நிலம் தாழிறங்கள் போன்ற நிலச்சரிவுக்கு முந்தைய அறிகுறிகள் காணப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் NBRO அறிவித்துள்ளது.