பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தம்மைக் கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது என தீர்ப்பளிக்குமாறு மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
இந்த மனு எஸ். துரை ராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது மனுதாரர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகியிருந்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் இந்த மனு மீதான விசாரணைக்கான திகதியை நிர்ணயிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
அதன்படி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2020ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு களங்கம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
June 19, 2024
0 Comment
50 Views