அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் I, II மற்றும் III ஆகிய உத்தியோகத்தர்களுக்கான வினைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அதிகாரிகளுக்காக அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த பரீட்சை 2024 ஜூன் மாதம் 30 நடைபெறவுள்ளதுடன் அதற்காக 52,756 விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் 353 நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளது.
பரீட்சை அனுமதிப் பத்திரம் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் https://revisions.slida.lk என்ற முகவரியைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.