தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தங்களுடைய இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் காரணமாகவே தேங்காய் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எண்ணையின் விலையை தீர்மானித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் விலை 1,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனவும்,
ஒரு போத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்கச் செய்யும் போக்கு காணப்படுவதாகவும் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.