17.06.2024 காலை 10.10 மணி அளவில் மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உடன் விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.