இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கடன் வழங்கிய நாடுகளின் குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
அந்த சந்திப்பின் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
சிலாபம் கிரிமதியான பௌத்த தேசிய பாடசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.