கொழும்பு;
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பிற்போடுவதா இல்லையா என 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை மேற்காெண்டு பதிலளிப்பேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை குறிப்பிட்ட காலத்துக்கு பிற்பாேட்டு மாணவர்களுக்கு நியாயத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இந்த பிரச்சினையை மனிதாபினமான ரீதியில் பார்க்க வேண்டும் என ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேட்டுக்கொண்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை பிற்போடவேண்டும் என ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. அதனால் இதனை மனிதாபிமானமாக அணுகி, பரீட்சையை பிற்போடுவதா இல்லையா என இன்று 21ஆம் திகதி சபையில் விசேட உரை ஒன்றை மேற்கொள்வேன்.
எனது உரையை அடுத்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார். மாணவர்களுக்கு அநீதி ஏற்படும் வகையில் நாங்கள் ஒருபோதும் செயற்பட மாட்டோம் என்றார்.