கொழும்பு வெள்ளம்பிட்டி கோகிலாவத்தையில் அமைந்துள்ள KJM சர்வதேச பாடசாலையின் ஏற்பாட்டில்,அப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய(15)தினம் கொத்தோட்டுவ நாஸ் கலாச்சார மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இன் நிகழ்வுக்கு KJM சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் குழாமின் அழைப்பின் பேரில்
ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து,உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்ததுடன்,
அப் பாடசாலையின் நிர்வாகத்தினர்,ஆசிரியர்கள், மாணவர்களோடு கலந்துரையாடிய அவர் தானும்,தனது ஜனனம் அறக்கட்டளையும் கல்விச் சமூகத்தை கட்டி எழுப்ப எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இறைவனுக்காக வேண்டி என்றும் முடியுமான உதவிகளை வழங்குவோம் என தெரிவித்தார்.
இப் பாடசாலையானது வெள்ளம்பிட்டி, கொலனாவ ஆகிய பிரதேசங்களில் குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்க முடியாத வசதி வாய்ப்பற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு கை கொடுக்கும் ஒரு சர்வதேச பாடசாலையாக செயற்பட்டு வருகின்றது இதில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது கல்வி கற்றுக் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.