‘டிஜிட்டல் ஊடகத்தின் முக்கியத்துவம்’ எனும் தொனிப்பொருளில் டிஜிட்டல் ஊடகம் மற்றும் இதழியல் கல்வி நிறுவனம் (IDMJ) ஏற்பாடு செய்த செயலமர்வு கொழும்பு 07, நியூ டவுன் ஹால் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திரு. கலீலுர் ரஹ்மான் டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகை கல்வி நிறுவனத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
அது அவர் அந்த நிறுவனத்துடன் இணைந்து எதிர்கால மாணவ சந்ததிகளுக்காக தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பிற்காக.