கொழும்பு
கல்வியியல் கல்லூரிகளுக்கு 2019 மற்றும் 20ஆம் ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை ஒக்டோபர் மாதத்தில் இணைத்துக்கொள்ள இருக்கிறோம். அதேபோன்று 2021ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வரத்தமானி அறிவிப்பு ஓர் இரு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20ஆம் திகதி புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது ராேஹின் குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,
2019,20ஆம் ஆண்டுகளில் கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவாகி இருக்கும் 1400 மாணவர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களை 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு பிரிக்கப்பட்டிருக்கிறோம். 2ஆம் ஆண்டு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு முடிவடைந்து தற்போது மேற்பார்வை இடம்பெற்று வருகிறது. இந்த நடவடிக்கை முடிவடைந்ததுடன் அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த மாணவர்கள் அனைவரையும் 19 பீடங்களுக்கும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அத்துடன் 2021 குழுவை கல்வியியல் கல்லூரிகளில் இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட வரத்தமானி அறிவிப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றார்.