20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் டிரினிடாட்டில் 15.06.2024 நடைபெற்ற 32வது லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட உகாண்டா – நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் உகாண்டா அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 40 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது. உகாண்டா தரப்பில் அதிகபட்சமாக கென்னத் வைஸ்வா 11 ஓட்டங்களை எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுக்களையும், பவுல்ட், சாண்ட்னெர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 41 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 5.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 41 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. நியூசிலாந்து தரப்பில் டெவான் கான்வே 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.