பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த 8339 என்ற ரயிலே தடம் புரண்டுள்ளது.
ரயிலின் பெட்டி ஒன்று அருகில் இருந்த சமிக்ஞை பகுதியில் மோதியதால் சமிக்ஞை அமைப்பு முற்றிலும் செயலிழந்ததுள்ளது.
தண்டவாளத்தை சீரமைக்க கணிசமான காலம் எடுக்கும் என்று ரயில்வே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.