இஸ்மதுல் றஹுமான்
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம்
நீர்கொழும்பு வலயக்கல்விக் காரியாலயம் முன்பாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
சம்பள அதிகரிப்பின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கை வழங்குமாறும் மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துமாறும் கல்விச் சுமையை பெற்றோர் மீது சுமத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பிரிவெனா ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர். இங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள்,
சம்பள அதிகரிப்பின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கை வழங்கு, எரிபொருள் விலையை குறை, சம்பளத்தை அதிகரி, பெற்றோர்களே இது உங்கள் பிள்ளைகளின் கல்வி உரிமைக்கான போராட்டம், கற்றல் உபகரணங்களின் விலையை குறை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளிலேந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ம் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் சிறிது தூரம் பேரணியாக சென்று மீண்டும் வலய கல்வி காரியாலயம் முன்பாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையின் மத்தியிலும் 500க்கும் மேற்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாசட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.