இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை 12.06.2024 கலந்துரையாடவுள்ளது.
இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக், சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இலங்கை கடன் மறுசீரமைப்பில் போதுமான மற்றும் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கையிருப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜூலி கோசெக் மேலும் தெரிவித்தார்.