க.பொ.த சாதாரன தர பரீட்சை நிறைவு செய்த உடனேயே உயர்தர கல்வியை ஆரம்பித்து பல்கலைக்கழகத்திற்கான நுழைவை துரிதப்படுத்துவதன் மூலம், மாணவர்களின் நேரத்தை வீணடிப்பதை தடுக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, 16 வயது முடிந்ததும் உயர்தர கல்வியும், 18 வயதை எட்டியவுடன் பாடசாலைக் கல்வியை முடித்து பல்கலைக்கழக நுழைவதற்கான வாய்ப்புகளைத் திறக்கும் நோக்கில், இதுவரை விடுபட்ட கற்கைகளை நிறைவு செய்வதற்காக இரண்டு குழுக்கள் பல்கலைக்கழக அமைப்பில் ஒரே நேரத்தில் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.