ரயில் இயந்திர இயக்கவியல் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினால் இதுவரை 80 இற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்தாகியுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, ரயில்களுக்காக காத்திருந்த மக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினால் நேற்று மாலை மாத்திரம் 43 ரயில் பயணங்கள் இரத்தாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ரயில் இயந்திர இயக்கவியல் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று பிற்பகல் வரை 32 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.