புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளைகள் புணரமைப்பு சம்மந்தமாக கலந்துரையாடல் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களின் பங்குபற்றுதலுடன் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மத்திய குழு, கிளைகள் புணரமைப்பு, கட்சிப் பணிகள் மற்றும் எதிர்காலசெயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இச்சந்திப்பின்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், உட்பட உயர்பீட உறுப்பினர்கள், நகர மற்றும் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.