கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி 08.06.2024 தற்காலிகமாக மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் அவ்வப்போது மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீதியில் உள்ள ஆபத்தான பாறை கற்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காகவே இவ்வாறு வீதி மூடப்படுவதாகும் தெரிவித்துள்ளார்.