இஸ்மதுல் றஹுமான்
சிறி லங்கா சுதந்திர கட்சியும் பங்கேற்கும் புதிய கூட்டணியின் பிரசாரக் கூட்டம் 8ம் திகதி சனிக்கிழமை மாலை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பலந்தொட்ட நகரில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
புதிய கூட்டணியை ஆரம்பித்ததன் பின்னர் சிறி லங்கா சுதந்திரக்
கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியின் நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளோம். எதிர் காலத்தில் இன்னும் சில அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பவற்றை ஒன்றிணைத்து பாரிய கூட்டணியை கட்டியெழுப்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இப் பகிரங்க பொதுக் கூட்டத்தை விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்துள்ளார். இக் கூட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசன்த அழகியவன்ன, துமிந்த திசாநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த, அநுர பியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பியங்கர ஜயரத்ன உற்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க தலைவர்கள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வுள்ளனர்.