காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 06.06.2024 முதல் மீண்டும் திறக்கப்படும் என மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் இடப்பெயர்வு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.