இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் 05.06.2024 முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, மாலைதீவுகள், சியரா லியோன் குடியரசு மற்றும் மொரீஷியஸ் குடியரசு என்பவற்றுக்கான உயர்ஸ்தானிகர்களும் குவாத்தமாலா குடியரசு, அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு, எஸ்டோனியா குடியரசு, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, கொலம்பியா குடியரசு, துருக்கி குடியரசு, அயர்லாந்து, ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) மற்றும் பல்கேரியா குடியரசு ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வரவேற்பதற்காக கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஒரு சிறிய விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கப்பட்ட புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் விபரம் பின்வருமாறு:
01. ஓமார் கெஸ்டனெடா சோலாரேஸ் – குவாத்தமாலா குடியரசு தூதுவர் (புது டில்லி)
(Omar Castaneda Solares.Ambassador-designate of the Republic of Guatemala based in New Delhi)
02. அலி அச்செய் – அல்ஜீரியா மக்கள் குடியரசு தூதுவர் (புது டில்லி)
(Ali Achoui.Ambassador-designate of the People’s Democratic Republic of Algeria in New Delhi
03. மர்ஜே லூப் – எசுத்தோனியா குடியரசு தூதுவர் (புது டில்லி)
(Marje Luup.Ambassador-designate of the Republic of Estonia in New Delhi)
04. பௌன்மி வன்மணி – லாவோஸ் மக்கள் குடியரசின் தூதுவர் (புது டில்லி)
(Bounmy Vanmany.Ambassador-designate of the Lao People’s Democratic Republic based in New Delhi)
05. விக்டர் ஹ்யூகோ ஜரமிலோ – கொலம்பியா குடியரசு தூதுவர் (புது டில்லி)
(Victor Hugo Jaramillo.Ambassador-designate of the Republic of Colombia based in New Delhi)
06. டேவிட் கிரிகரி பைன் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் (கொழும்பு)
(David Gregory Pine.High Commissioner-designate of New Zealand based in Colombo)
07.செமிஹ் லுட்பு தரகத் – துருக்கி குடியரசு தூதுவர் (கொழும்பு)
(Semih Lütfü Turgut.Ambassador-designate of the Republic of Türkiye based in Colombo)
08. எவகோரஸ் வர்யோனைட்ஸ் – சைப்ரஸ் குடியரசு உயர்ஸ்தானிகர் (புது டில்லி)
(Evagoras Vryonides.High Commissioner-designate of the Republic of Cyprus based in New Delhi)
09. கெவின் கெலி – அயர்லாந்து தூதுவர் (புது டில்லி)
(Kevin Kelly.Ambassador-designate of Ireland based in New Delhi)
10. மசூத் இமாத் – மாலைதீவு குடியரசு உயர்ஸ்தானிகர் (கொழும்பு)
(Masood Imad.High Commissioner-designate of the Republic of Maldives based in Colombo)
11. அலிகி கௌட்சோமிடோபௌலோ – ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) தூதுவர் (புது டில்லி)
(Aliki Koutsomitopoulou.Ambassador-designate of the Hellenic Republic based in New Delhi)
12. அபூ பக்கர் கரீம் – சியேரா லியோனி குடியரசு உயர்ஸ்தானிகர் (பீஜிங்)
(Abu Bakarr Karim.High Commissioner-designate of the Republic of Sierra Leone based in Beijing)
13. நிகோலாய் யான்கோவ் – பல்கேரியா குடியரசு – தூதுவர் (புது டில்லி)
(Dr. Nikolay Yankov.Ambassador-designate of the Republic of Bulgaria based in New Delhi
14. ஹெய்மண்டோயல் தில்லும் – மொரிசியசு குடியரசு உயர்ஸ்தானிகர் (புது டில்லி)
(Haymandoyal Dillum.High Commissioner-designate of the Republic of Mauritius based in New Delhi)
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.