பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் வழங்கியாக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சம்பள உயர்வு விடயத்தில் நீதிமன்ற அறிவிப்பு தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்க வேண்டுமென அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
ஆனால் இவ்வாறு வெளியிடப்பட்ட வருத்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவை வழங்க வேண்டும் என அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் நீதிமன்றம் சென்று வழங்கு தொடர்ந்திருந்தனர்.
இருந்தபோதிலும் நேற்று (03) இந்த வழக்கு மீதான விசாரணை மேன் முறையீட்டு நீதிமன்றதால் விசாரிக்கப்பட்ட நிலையில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு வழங்க முடியாதென உத்தரவிட்டது.
அப்படியென்றால் பெருந்தோட்ட நிறுவனங்கள் அனைத்தும் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை கட்டாயம் வழங்கியாக வேண்டும்.
இந்த விடயத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேருங்கள் மக்களுக்கும் தெரியட்டும் அரசாங்கம், மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக மக்களுக்கு தீர்வை பெற்று கொடுத்துள்ளோம் என்று. இதுபோன்ற மலையக மக்கள் மட்டுமின்றி ஏனைய மக்களுக்கும் இவ்விடயம் தெரிந்ததாக வேண்டும்.
குறிப்பாக இ.தொ. கா தலைவர் செந்தில் தொண்டமான், காங்ஙகிரஸின் தவிசாளர் உள்ளிட்ட அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.