வெள்ளத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க ஜப்பான் சர்வதேச கூட்டுறவு சங்கம் (JICA) 80 இலட்சம் ரூபா மதிப்பிலான மருந்துகளை வழங்கியுள்ளது.
ஆற்று நீர் நிலை காரணமாக ஏற்படும் நோய்களில் இருந்து கால்நடைகள், ஆடுகள், கோழிகள் மற்றும் பன்றிகளை பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட இந்த மருந்துகளை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திற்கு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.