சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு 04.06.2024 விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்பமைய பாடசாலைகள் 04.06.2024 நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி. குஷான் சமீர அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அவை பின்வருமாறு,
சப்ரகமுவ மாகாணம்
* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
தென் மாகாணம்
*காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
*மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
மேல் மாகாணம்
* களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
* கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்
இதன்படி ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.