சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12 ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் சீர்திருத்த முயற்சிகளை மேலும் மேம்படுத்தும் மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கான வெற்றிகரமான மீளாய்வுக்கு அனைத்து நாடுகளின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.