நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மொரட்டுவ சொய்சாப்புர பிரதேசத்தில் அமைந்துள்ள சீ தொகுதி தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் தொடர்மாடி கட்டிடத்தில் ஒரு பகுதி சேதம் அடைந்த நிலையில் அங்கு வசிக்கும் 64 குடும்பத்தினரும் அப் பாதிப்பினால் அவஸ்தை அடைந்து வந்தனர்.
இன் நிலையில் இதனை ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அங்கு நேற்றைய தினம் (01) உடன் களத்துக்கு விஜயம் செய்த கலாநிதி ஜனகன் அவர்கள் சேதம் அடைந்த இடத்தை பார்வையிட்டதுடன்,அந்த தொடர்மாடி கட்டட தொகுதியில் பல சிறார்களும் வாசித்து வருகின்றர்கள் என்பதை அறிந்து கொண்டதுடன்.
அக் கட்டடத்தில் ஏற்றபட்ட பாதிப்பினால் பாதிகாப்பு அற்ற சூழ்நிலையை அவதானித்ததை அடுத்து அதனை உடனடியாக புனர் நிர்மாணம் செய்வதற்காக ஒரு தொகை நிதி உதவியினையும் வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும்,அக் குடியிருப்பில் உள்ள மக்களும் கலந்து கொண்டனர்.