இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் போன்ற நிறுவனங்களால் அதன் பணியாளர்களுக்குச் செலுத்த வேண்டியுள்ள நியதிச் சட்டக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உரிய நியதிச் சட்டக் கொடுப்பனவுகள் முறையாக செலுத்தப்படாமையினால் பல பகுதிகளில் 2,000ற்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த நியதிச் சட்டக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக அந்தந்த நிறுவனங்களின் வருமானம் போதியளவில் இன்மையால், அதற்குத் தேவையான தொகையை கடனாக திறைசேரியிலிருந்து வழங்கி, குறித்த நிறுவனங்களின் வருமானங்களிலிருந்து அந்தக் கடன் தொகையை தவணை அடிப்படையில் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.