மெல்பேர்ண்: ஆறு தசாப்த காலமாக தமிழ் ஒலிபரப்பு துறையின் அனைத்து சிகரங்களையும் தொட்டு ,சர்வதேச தமிழ் மக்களின் அபிமானம் பெற்ற, அன்பு அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீத் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வுகளும், அவர் எழுதிய வான் அலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் வெளியீடு , கடந்வாரம்,ஆஸ்திரேலியாவின், மெல்பேர்ண் நகரில் ,பெருந்திரளான வானொலி அபிமானிகள் முன்னிலையில் நடை பெற்றத
செப்டம்பர் 8 திகதி ,இலங்கை பின்னணியை கொண்ட , மெல்பேர்ண் இஸ்லாமிய தமிழ் அமைப்பான ஆஸ்லங்கா அமைப்பின் கௌரவம் வழங்கும் நிகழ்வு ,அதன் தலைவர் கலாநிதி கலீல் ரகுமான் தலைமையில் நடைபேற்றதுடன், மெல்பன் நகரின் மூத்த தமிழ் அறிவிப்பாளர் A. J. ஷஹீம் அவர்களின்,இலங்கை வானொலியும், B.H. அப்துல் ஹமீத் அவர்களின் வகீபாகமும் எனும் தலைப்பில் சிறப்புரயும் நிகழ்த்தப்பட்டது .
செப்டம்பர் 9 தேதி, நடைபெற்ற நிகழ்வு
A.J. ஷ ஹீம் அவர்களின் தலைமையில் B.H. அப்துல் ஹமீத் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் A.J ஷஹிம் அவர்கள் இலங்கை வானொலியின் பொட்காலமும் ,B.H அப்துல் ஹமீத் அவர்களின் வகீபாகம்,எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
உலக அறிவிப்பாளர், B. H. அப்துல் ஹமீத் அவர்களுக்கு, இலங்கையின் போப் இசை பிதா N. கனகரத்தினம் அவர்களால் பொன்னாடை போர்த்தி , மெல்பேர்ண் வானொலி அபிமானிகள் சார்பாக விருதும் வழங்கி ,கௌரவிக்கப்பட்டார்.
அப்துல் ஹமீத் அவர்களின்
வான்னலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுகம், மெல்பேர்ண் சட்டத்தரணி , பாடும்மீன் சு. ஶ்ரீ கந்தராச தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முஜிபுர் ரகுமான், திருமதி விஜி இராமச்சந்திரன், பொண்ணரசு சிங்காரரம் ஆகியோர் விமரசாசன உரை நிகழ்த்தினர்.
உலக அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீத் அவர்களின் ஏற்புரை நிகழ்வின் பின்னர் விழா முற்று பெற்றது.
Demon ,மெல்ப்பர்ன் வான் இசை வானொலியின் இயக்குனர் சுகிர்த குமார் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.