இஸ்மதுல் றஹுமான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகாயமடைந்து கடந்த ஐந்து வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த திலினா ஹரசனீ அப்புஹாமி எனும் பெண் 27ம் திகதி காலமானார்.
கட்டுவபிட்டிய கிராமத்தைச் சேர்ந்த இப் பெண் கட்டுவபிட்டி சென் செபஸ்தியன் தேவஸ்தானத்திற்கு உயிர்த்த ஞாயிறு ஆராதனைக்கு சென்ற வேளையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.
இவரின் ஒரு பிள்ளை குண்டுத் தாக்குதலின் போது அன்றைய தினமே மரணமடைந்தார்.
நீர்கொழும்பு பல நோக்கு கூட்டுரவுச் சங்கத்தில் வேலை செய்த இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். இறுதிச்சடங்கு நாளை 29ம் திகதி மாலை செல்லகந்த மயானத்தில் இடம்பெறும்.