17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துள்ளது.
17 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையில் சென்னையில் 26.05.2024 இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் தலைவர் Pat Cummins 24 ஓட்டங்களையும் Aiden Markram 20 ஓட்டங்களை பெற்றதுடன் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் Andre Russell 03 விக்கெட்டுக்களையும் Mitchell Starc மற்றும் Harshit Rana ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், 114 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Venkatesh Iyer ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.