நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நகரிலுள்ள சில வீதிகளை இன்றிரவு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரங்கள் முறிந்து வீழ்ந்து ஏற்படுகின்ற சேதங்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
இதன்படி. பௌத்தாலோக்க மாவத்தை – மலலசேகர மாவத்தை முதல் தும்முல்லை சுற்றுவட்டம் வரையாக வீதியும், விஜேராம வீதியின் கேகரி முச்சந்தி முதல் பௌத்தாலோக்க வீதி வரையும், பெரஹெர மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி முதல் ரொடுண்டா முச்சந்தி வரையான வீதியும், பேப்ரூக் பகுதியும் இவ்வாறு மூடப்படவுள்ளன.
இதேவேளை, வெசாக் தோரணைகளை பார்வையிடுவதற்கு வருகைத் தருவோர், தமது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் தரித்து விட்டு, வெசாக் வலயங்களுக்கு செல்லுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.