குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 25.05.2024 பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், விபத்து தொடா்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.