க.பொ.த(சா/த) பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தமது இலக்கை அடைவதற்கு எவ்வாறான செயன்முறைகளை பின்பற்றலாம் என்பதனை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வழிகாட்டல் செயன்முறையானது புத்தளம் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.
இவ் வழிகாட்டல் செயன்முறையானது எதிர்வரும் வைகாசி மாதம் 30 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரை புத்தளம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இச்செயன்முறையில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களது கனவு பாதையை நோக்கி பயணிக்க பயனுள்ளதாக அமையும்.