புஸ்ஸ பிந்தாலிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் 17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.