நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இந்தப் பொருட்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 950.00 ரூபா,
பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 250.00 ரூபா,
ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 450.00 ரூபா,
ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.