யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் இருந்த பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்ட சம்பவமொன்று 21.05.2024 இரவு பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – மருதனார் மடத்தில் உள்ள கடையொன்றில் இரவு உணவிற்காக வாங்கிய பாணிலேயே குறித்த கண்ணாடித் துண்டொன்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.