ஏ.எஸ்.எம்.ஜாவித்
ஹிஜ்ரி 1445 ரபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.
இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்பட்டதற்கான ஊர்ஜீதம் செய்யப்பட்ட எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறாமையினால் நாளை சனிக்கிழமை மாலை மஹ்ரிபுடன் ரபிஉல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என நாட்டு மக்களுக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைபார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவர் மௌலவி எம்.பி.எம்.ஹிஸாம் அல்- பத்தாஹி தலைமையில் இடம் பெற்றது. இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் எம்.தாஹிர் ரஸீன்இ அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை பிரதிநிதி மௌலவி அப்துல் முக்சித்இ முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிநிதி ஏ.எஸ்.எம்.ஜாவித்இ வளிமண்டல திணைக்கள அதிகாரி மொஹமட் ஸாலிகீன்இ பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் தௌபீக் சுபைர்இ கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிகையாளர்கள்இ மேமன் சங்க உறுப்பினர்கள்இ ஏனைய பள்ளிவாசல்கள்இ ஸாவியாக்கள்இ தரீக்காக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இன்று பிறை தென்படாத காரணத்தினால் ஸபர் மாதத்தை நாளை 16ஆம் திகதி 30 ஆக பூர்த்தி செய்து நபி ஸல் அவர்களின் பிறந்தமாதமான ரபிஉல் அவ்வல் மாதம் நாளை சனிக்கிழமை மாலையுடன் (16) ஆரம்பமாவதாகவும் மீலாதுன் நபி தினம் எதிர்வரும் 2023.09.28ஆம் திகதி (பிறை 12) வியாழக்கிழமை கொண்டாடப்படும் எனவும் பிறைக்குழு மாநாட்டில் ஏகமனதாக தீர்மாணிக்கப்பட்டது.