கொழும்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நவம்பர் 5 ஆம் திகதி வரை அவர் அமெரிக்காவில் உள்ள சில பிரதான நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளார்.
லெஸ் ஏஞ்சலீஸ், பொஸ்டன், ஹூஸ்டன், நியூயோர்க், வொஷிங்டன், வேர்ஜினியா ஆகிய நகரங்களில் தேசிய மக்கள் சக்தியின் கிளை அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் அவர் உரை நிகழ்த்த உள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்து, அங்கு சில நகரங்களில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றியிருந்தார்.