[11:55 AM, 5/16/2024] Yoosuf Roshan: தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15) 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது.
சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம் கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்
[12:58 PM, 5/16/2024] Yoosuf Roshan: துமிந்தவின் மனு நிராகரிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கட்சி, அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான உண்மைகளை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதியரசர் சந்துன் விதான தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.