தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி 15.05.2024 இரவு உயிரிழந்தார்.
அவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தியத்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்எதண்ட பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதான சிறுமியின் சடலம் தற்போது பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
2024 ஃபொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் கடந்த மாதம் 21 ஆம் திகதி தியத்தலாவை நரியகந்த பந்தய திடலில் இடம்பெற்றது.
அன்று மாலை பந்தயத்தில் பங்கேற்றிருந்த கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 07 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பந்தய உதவியாளர்கள் நான்கு பேரும், பார்வைாளர்கள் மூன்று பேரும் அன்று அந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவியொருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.