அரச அரசார்பற்ற துறை வேலைவாய்ப்பு தொடர்பான தொகை மதிப்பை மேற்கொள்ள தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்தவகையில் அரச மற்றும் அரசசார்பற்ற துறைகளில் அமைய, தற்காலிக, நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் அலுவலர்களின் தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதி பெறுவதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனவே உங்கள் தகவல்களை உரிய முறையில் வழங்கி உதவுமாறு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொள்கின்றார். மேலதிக தகவல்களை 0112147479 மற்றும் 0755768778 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
May 15, 2024
0 Comment
63 Views