( ஐ. ஏ. காதிர் கான் )
கொழும்பு ( Bcas campus ) “பீகாஸ் கல்லூரி” யின் சிறப்புப் பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், 13.05.2024 திங்கட்கிழமை இரு அமர்வுகளாக இடம்பெற்றன.
“காலை அமர்வு, மாலை அமர்வு” என நடைபெற்ற இந்த இரு அமர்வுகளின் பட்டமளிப்பு விழாக்களில், கல்லூரியின் தலைவர், முகாமைத்துவப் பணிப்பாளர், கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
காலையில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
காலை அமர்வில் கல்லூரியின் கொழும்புக் கிளை மற்றும் கல்முனைக் கிளை மாணவ மாணவிகள் பலபேர், சிறப்புச் சான்றிதழ்கள் பெற்று பட்டதாரிகளாக வெளியேறினர். இதில், கல்முனைக் கிளையிலிருந்து மாத்திரம் 160 பேருக்கும் மேற்பட்டோர், சிறப்புப் பட்டதாரிகளாக வெளியேறியமை சிறப்பம்சமாகும்.
காலை அமர்வின்போது, Business Management and software engineer
ஆகிய பாட நெறிகளை மிக வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
காலை அமர்வில் இடம்பெற்ற இச்சிறப்புப் பட்டமளிப்பு விழாவில், கல்லூரியின் கல்முனைக் கிளை முகாமையாளர் மொஹமட் இஸ்ராக் காலிதீன் உட்பட ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.