( ஐ. ஏ. காதிர் கான் )
பாணந்துறை – அம்பலந்துவை கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக றிஸான் சௌக்கத் அலி, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், மர்ஹூம் சௌக்கத் அலி – முன்னாள் ஆசிரியை ஜனீபா உம்மா தம்பதியினரின் புதல்வருமாவார்.
பாணந்துறை – அம்பலந்துவை இல்மா வித்தியாலயத்தின் பழைய மாணவரான றிஸான், தனது பெற்றோருக்கும், பாடசாலைக்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.