சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அரசாங்கத்தின் கால்நடை திணைக்களங்கள் தெரிவித்திருந்த போதிலும் முட்டையின் விலை 50 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த நாட்களில் சில்லறை சந்தையில் சிறிய அளவிலான முட்டை 45-47 ரூபாய்க்கும், நடுத்தர அளவிலான முட்டை 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
லங்கா சதொச கடைகளில் முட்டைகள் கையிருப்பில் இல்லை எனவும், மிகக் குறைந்த அளவிலேயே முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் லங்கா சதொச ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்