இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கம காரணமாக இவ்வாறு மாதச் செலவு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு 16.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சராசரியாக குடும்பம் ஒன்றின் மாதச்செலவு 103283 ரூபா என மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் பிரகாரம் 2022ம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் ஒரு மாத நுகர்வுச்செலவு 88704 ரூபா என அறிவித்திருந்தது.
இந்த தொகை 2023 ஆம் ஆண்டில் 103283 ரூபாவாக ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உணவு அல்லாத பொருட்களுக்கு கூடுதல் அளவில் மக்கள் செலவிட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் உணவு அல்லாத செலவுகள் 56.2 வீதமாக காணப்பட்டுள்ளது.
உணவு அல்லாத பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவ்வாறு செலவுகளும் உயர்வடைந்துள்ளன.