தேசிய டெங்கு ஒழிப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் 71 சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையையடுத்து டெங்கு அபாயம் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.