( ஐ. ஏ. காதிர் கான் )
நீர்கொழும்பு – கொச்சிக்கடையை பிறப்பிடமாகவும், மினுவாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்ட எம்.ஆர். மொஹொமட் ரிஸ்வி, உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில், வியாழக்கிழமை சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், மிகவும் ஆளுமை மிக்க நீதிமன்ற உரை மொழி பெயர்ப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு – அல் ஹிலால் மத்திய கல்லூரி மற்றும் நீர்கொழும்பு லொயோலா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
இவர், நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த மர்ஹூம் மொஹமட் ரிஷாத் – சித்தி ஜெஸீமா தம்பதியினரின் புதல்வருமாவார்.